Published : 23 Apr 2023 12:47 PM
Last Updated : 23 Apr 2023 12:47 PM

அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் திமுகவினர் முன்னெடுக்கிறோம்.புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது" என்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நல்ல புத்தகங்கள் நல்ல தோழன். ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது, நம்மை பண்படுத்துகிறது.

அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் திமுகவினர் முன்னெடுக்கிறோம்.புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்" என்று பதிவிட்டுள்ளார்.

உலக புத்தக தினம் ஏப்.23-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே 1996-ம் ஆண்டு ஏப்.23 நாளில்உலக புத்தக தின கொண்டாட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x