Published : 19 Sep 2017 08:31 PM
Last Updated : 19 Sep 2017 08:31 PM

சமூகநீதியில் இந்தியாவில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான்: நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் தினகரன் பேச்சு

சமூக நீதியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான் என்று டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசியதாவது:

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது கடைசி உயிர் மூச்சு வரை நீட். தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். சமூகநீதியில் இந்தியாவில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றார். 2005-ல் மருத்துவ , பொறியியல் சேர்க்கைக்கு தேர்வு தேவை இல்லை என அன்றே அகற்றி கட் ஆப் மதிப்பெண் முறை கொண்டு வந்த காரணத்தால் தான் கிராம புற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி பெற முடிகிறது.

ஆனால் 2011ல் மன்மோகன் சிங் ஒட்டு மொத்தமாக நீட் வேண்டும் என்பதை ஜெயலலிதா  எதிர்த்து உறுதியாக இருந்து போராடி வந்தார். 2013-ல் கூட உச்சநீதிமன்றத்தில் நீட் தேவையில்லை என்று கூறினார். தமிழகத்தில் இன்று நடைபெறுவது துரோக ஆட்சி,  தவறான பாதையில் சென்று தவறான நீட் தேர்வுக்கு விலக்கு என தவறாக நம்பிக்கை அளித்ததால்தான் அனிதா மரணம் போன்ற துர் சம்பவங்கள் நிகழ்ந்தது.

இது போன்ற தற்கொலைகள் தொடரக்கூடாது என்பதால் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி ந்இந்த கூட்டமானது நடைபெறுகிறது.

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. சசிகலா, எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்க தான் ஓபிஎஸ் முதல்வராக்கப் பட்டார். ஆனால் ஓபிஎஸ் திமுகவோடு சேர்ந்து செயல்படுகிறார் என ஈபிஎஸ் சசிகலாவிடம் வைத்த கோரிக்கையினால் ஆட்சிப் பொறுப்பும், கட்சித் தலைமையும் ஓருவரிடமே இருக்க வேண்டும் என விரும்பிதால் சசிகலா முதல்வராக ஏற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பால் முதல்வராக பதவியேற்க முடியாமல் போனது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைப்பிற்கு பிறகு சசிகலா நீக்கப்படுவார் என சொன்ன காரணத்தால் ஆளுநரை சந்தித்தோம். அவரிடம் முறையிட்டும் எடப்பாடி 117 உறுப்பினர் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் சொல்லியும் பலனில்லை. கவர்னர் கவர்னராக செயல்படுகிறாரா? அல்லது எடப்பாடியின் அவைத் தலைவராக செயல்படுகிறாரா என்ற கேள்வி எழாமல் ஆளுநர் எடப்பாடியை அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.

நாம் திமுகவோடு கை கோர்க்க முடியாது. ஆட்சி கவிழ்ந்த பிறகு எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் இது சபதம். அது தான் ஒன்றரை கோடி தொண்டரின் மனநிலையும்.

மீண்டும் எடப்பாடி அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலை உருவாக்கி அனைத்து அமைச்சர்களும் வீட்டுக்குப் போவது உறுதி. எங்களுக்கு பதவி முக்கியமில்லை.

அதிமுகவை காப்பாற்ற 21 பேர் போராளிகளாக இருக்கிறார்கள். பழனியப்பன், செந்தில் பாலாஜி மீதும் பொய் வழக்கு போடப் பட்டுள்ளது. அதில் பழனியப்பன் ஜாமீன் வாங்கி விட்டார். அஇஅதிமுகவை காப்பாற்ற போராடுகிற எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முயல்கிறார்கள். நீதிமன்றம் இருப்பதையே மறந்து விட்டு செயல்படுகிறார்கள் நிச்சயம் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடியை தோற்கடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

இவ்வாறு பேசினார் டிடிவி தினகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x