Published : 25 Sep 2017 09:05 AM
Last Updated : 25 Sep 2017 09:05 AM

பார்மசி டிப்ளமோ, நர்சிங் தெரபி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பார்மசி டிப்ளமோ மற்றும் நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.350.

இதை "DIRECTOR OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY" என்ற பெயரில் சென்னையில் செலுத்தத்தக்க டிமாண்ட் டிராப்டாக அளிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தை www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x