சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை.
Updated on
1 min read

கோவை: கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மன்னார்காடு பகுதியில் உள்ள அட்டப்பாடியில் இருந்து பிரிந்து பல்வேறு வழித்தடங்களில் செல்லும் சிறுவாணி ஆறு, கோவை மாவட்டம் பவானியாற்றில் இணைகிறது.

இந்நிலையில், அட்டப்பாடி அருகேயுள்ள கூலிக்கடவு - சித்தூர் சாலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாகவும், ஏறத்தாழ 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரளா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது,‘‘அட்டப்பாடி அருகே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுவாணி ஆறும், பவானியாறும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆனால், கேரள அரசு காவிரி மேலாண்மை வாரியத்திலும் அனுமதி பெறாமல் சிறுவாணியில் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இந்த தடுப்பணைகளை தடுக்காவிட்டால் கோவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்’ என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in