Published : 21 Aug 2017 02:50 PM
Last Updated : 21 Aug 2017 02:50 PM

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா: கமல் விமர்சனம்

 

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா என்று நடிகர் கமல்ஹாசன் அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஊழல் குறித்தும் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழக அமைச்சர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன் பேச்சுக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ள நிலையில் இது குறித்து ட்விட்டரில் கமல், ''காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா'' என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x