Published : 21 Apr 2023 06:00 AM
Last Updated : 21 Apr 2023 06:00 AM
சென்னை: சென்னை கழிவுநீர் வடிகால் வாரியம் சார்பில் மணப்பாக்கம், கிருகம்பாக்கம் பகுதிகளில் மணப்பாக்கம் பிரதான சாலையில் கழிவுநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மணப்பாக்கம் பிரதான சாலை கிருஷ்ணா கட்டிட சந்திப்பிலிருந்து சாய்பாபா ஆலயம் வரை சுமார் 285 மீட்டர்தொலைவுக்கு கழிவுநீர் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து அப்பகுதிகளில் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் சோதனை அடிப்படையில் ஏப்.20 முதல் மே 15 வரை கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து போலீஸார் மாற்றம் செய்துள்ளனர். அதன் விவரம்:
குன்றத்தூர், முகலிவாக்கத்திலிருந்து மவுன்ட் பூந்தமல்லி வழியாக கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஆவடிகாவல் ஆணையரகம் முகலிவாக்கம் பிரதான சாலை இடதுபுறம் திரும்பி குமுதம் பிரதானசாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுன்ட் பூந்தமல்லி சாலையில் வந்து சென்றடையலாம்.
பம்மல், கிருகம்பாக்கத்திலிருந்து மவுன்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் மணப்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா கட்டிட சந்திப்பு இடதுபுறம் திரும்பிமுகலிவாக்கம் பிரதான சாலை ஆவடி காவல் ஆணையரகம் வலதுபுறம் திரும்பி குமுதம் பிரதான சாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலைவழியாக மவுன்ட் பூந்தமல்லி சாலையில் வந்தடையலாம்.
கிண்டியிலிருந்து மவுன்ட் பூந்தமல்லி சாலை வழியாக குன்றத்தூர், முகலிவாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் நந்தம்பாக்கம் பாலம் சந்திப்பு இடதுபுறம் திரும்பி சாய்பாபா ஆலய வலதுபுறம் திரும்பி மணப்பாக்கம் பிரதானசாலை வழியாக ராமாபுரம் இடதுபுறம் ஆவடி காவல் ஆணையரகம் முகலிவாக்கம் பிரதான சாலை இடதுபுறம் திரும்பி குமுதம் பிரதானசாலை, சபரி நகர், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுன்ட் பூந்தமல்லிசாலையில் வந்து சென்றடையலாம். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT