Published : 21 Apr 2023 06:52 AM
Last Updated : 21 Apr 2023 06:52 AM

சென்னை | பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியபின் மயங்கிய ஓட்டுநர்

சென்னை: சென்னை நசரத்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் பேருந்தை நேற்று முன்தினம் காலை இயக்கினார். அந்த பேருந்து காசிமேட்டை நோக்கி வந்தபோது ஓட்டுநர் கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்தின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான நிறுத்தினார். அடுத்தநொடியே மயங்கி தனது இருக்கையிலேயே சரிந்தார்.

இதைப் பார்த்தநடத்துநர் நாராயணசாமி, பயணிகளை இறக்கிவிட்டு, அருகில் இருந்த போக்குவரத்து உதவிஆய்வாளர் சிவாவின் உதவியுடன் கார்த்திகேயனை தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை முடிந்துஓட்டுநர் கார்த்திகேயன் மாலையில் வீடு திரும்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x