Published : 21 Apr 2023 06:36 AM
Last Updated : 21 Apr 2023 06:36 AM
சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவில், 3 வழித்தடங்களில் செயல் படுத்தப்படுகிறது. இந்நிலையில், வழித்தடங்களை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மூன்று வழித்தடங்களின் நீட்டிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. இதில், கூட்ட நெரிசல், அடுத்த 30 ஆண்டுகளுக்கான தேவை, புதிய கட்டமைப்புகளுக்கான செலவு, தேவைப்படும் நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இந்த ஆய்வுப் பணியை முடித்து, மே இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும். அந்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சரிபார்த்த பின்னர், அந்த ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT