கர்நாடகா தேர்தல்: மேலும் 2 தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்
ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியைத் தொடர்ந்து, மேலும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். அதிமுக சார்பில் டி.அன்பரசன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், புலிகேசி நகரில் அதிமுக தரப்பில் நெடுஞ்செழியன் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று மேலும் 2 தொகுதிக்கான வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதன்படி, கோலார் தங்க வயல் தொகுதியில், ஆனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in