ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்: அன்பில் மகேஸ்

கருணாநிதி | கோப்புப் படம்
கருணாநிதி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து பாடம் இடம்பெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in