மே தின பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு

மே தின பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: வரலாற்றுச் சிறப்புமிக்க மே தினத்தை கொண்டாடும் வகையில், அதிமுக தொழிற்சங்க பேரவை சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்கள், புதுச்சேரியில் மே தின பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

அண்ணா தொழிற்சங்க செயலாளர்களும், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள மே தின விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து நடத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in