Published : 20 Apr 2023 07:15 AM
Last Updated : 20 Apr 2023 07:15 AM
சென்னை: சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை திரைப்பட பாணியில் போலீஸார் விரட்டி பிடித்தனர். அவர்களிடமிருந்து 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மெரினா காமராஜர் சாலை, பூந்தமல்லி சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரைச் சாலைஉள்ளிட்ட முக்கிய சாலைகளில்இளைஞர்கள் அவ்வப்போது பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
இதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும்போதுநிகழும் விபத்துகளால் பைக்கைஓட்டிச் செல்வோர் பின்னால், இருப்பவர்கள் மட்டும் அல்லாமல் எதிர் திசையில் வருவோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இதன் காரணமாக பைக்ரேசில் ஈடுபடுவோர் மீது போலீஸார் கைது நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட பைக்குகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார்சி.சரத்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பைக் ரேஸை தடுத்து நிறுத்துவதோடு, அவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து போலீஸார் மட்டும் அல்லாமல்சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டனர். நேற்றுஅதிகாலை 1.30 மணியளவில்சென்னை அண்ணாசாலை,டேம்ஸ் சாலை, வெலிங்டன் சாலை, பாந்தியன்சாலை, ஸ்பென்சர் பகுதியில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.
வாகன தணிக்கையில் இருந்த போலீஸார் இதனைகண்டு பைக் ரேஸில் ஈடுபட்டஇளைஞர்களை சினிமா பாணியில் விரட்டியும், மடக்கியும் பிடித்தனர். அவர்களிடமிருந்து 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் நள்ளிரவில் மீண்டும் பைக் ரேஸ் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: ஆலந்தூரைச் சேர்ந்த பிளஸ் 1 படித்து வந்த 16 வயதுடைய மாணவன் ஒருவர் நேற்று அதிகாலை ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக ஆலந்தூரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது நண்பருடன் பரங்கிமலை சுரங்கபாதை அருகே திரும்பும்போது பைக் நிலை தடுமாறியது. அங்குள்ள மெட்ரோ ரயில் பில்லர் மீது மோதி கீழே விழுந்தனர்.
இதில் பைக்கை ஓட்டி வந்த சிறுவன் தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தநண்பரின் இரு கைகளிலும் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT