அடுக்குமாடி கட்டிடங்கள் தொடர்பாக பேரவையில் அமைச்சர் முத்துசாமி விளக்கம்

அடுக்குமாடி கட்டிடங்கள் தொடர்பாக பேரவையில் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீட்டுவசதி வாரியத்துக்கு இடம் கிடைக்காதபோது, அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக ஆலோசித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ‘‘ நிலமில்லாத, நெருக்கடியான பகுதிகளில் 20, 30 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்களை கட்ட அரசு முன்வருமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

விரைவில் ஆலோசனை: இதற்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, ‘‘இதுநல்ல ஆலோசனைதான். ஆனால், நடைமுறையில் தற்போது ஏற்கெனவே கட்டிய வீடுகளில், 8 ஆயிரம் வீடுகள் விற்காமல் உள்ளன. எனவே,இதுகுறித்து ஆய்வு செய்து, அவசியம் என்று கருதும் இடங்களில் கட்டிடங்கள் கட்டலாம் என்று கருதுகிறோம்.

எனினும், மாநகரப் பகுதிகளில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டலாம் என்பது நியாயமான கருத்து. இது தொடர்பாக ஆலோசனை செய்து, தக்க நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in