Published : 20 Apr 2023 06:16 AM
Last Updated : 20 Apr 2023 06:16 AM
சென்னை: தனிஷ்க் நிறுவனம் சார்பில் 'தி சோழா' நகைகளின் இரண்டாம் தொகுப்பு மற்றும் தங்க நாணயங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
டாடாவின் அங்கமான தனிஷ்க் நிறுவனம் சார்பில் சோழர்களின் வரலாற்றை நினைவுகூரும் வகையில், 'தி சோழா' என்னும் தங்க நகைகளின் தொகுப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தொகுப்பின் இரண்டாம் பாகம் மற்றும் சோழர்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான தங்க நாணயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதை சென்னை, தியாகராய நகரில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் டைட்டன் நிறுவனத்தின் தெற்கு பிராந்திய வணிகத் தலைவர் ஆர்.ஷரத் நேற்று அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: தனிஷ்க் நிறுவனத்துக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கிளை சென்னையில்தான் தொடங்கப்பட்டது. அதிக கிளைகளும் தமிழகத்தில்தான் உள்ளன. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சோழா தொகுப்பு நகைகள் தொடர்பாக பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் 17 புதிய நகைகளை வடிவமைத்துள்ளோம்.
இவை தவிர்த்து, நடராஜ், வெற்றியின் காரிகை,கரந்தை வெற்றி, ராஜேந்திர சோழன் ஆகிய 4 வகையான நாணயங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அட்சய திருதியை பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்கிறோம்.
நாணயத்தைப் பொறுத்தவரை லிமிடெட் எடிஷன் என்பதால் ஆயிரம் நாணயங்கள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நகைகளின் செய்கூலியில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இச்சலுகை வரும் 24-ம் தேதி வரை அமலில் இருக்கும். அனைத்து நாட்களிலும் 100 சதவீத எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ற நாட்களில் தங்கத்தை முன்பதிவு செய்யும் வசதியும் ஏப்.30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
தமிழகத்தில் மேலும் சில கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கையும், இந்திய அளவில் விரைவில் 500-வது கிளையைத் திறப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மண்டல வணிக மேலாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT