

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஒடிசா மாநிலம் சம்பல்பூர் - கோவை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311),
இன்று (ஏப்.19) முதல் வரும் ஜூன் 28-ம் தேதி வரை புதன் கிழமை, தோறும் சம்பல்பூரில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு, வியாழக் கிழமை இரவு 9.40 மணிக்கு கோவை வந்தடையும். மறுமார்க்கத்தில், கோவை - சம்பல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08312), வரும் 21-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளிக் கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.
இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும். கோவை-சம்பல்பூர் இடையிலான சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.