Published : 19 Apr 2023 06:43 AM
Last Updated : 19 Apr 2023 06:43 AM

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரின் குடும்பத்தினர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

சென்னை: வருமானத்தைவிட அதிக சொத்து வாங்கிக்குவித்ததாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி நியூ செகரட்டேரியட் காலனி 2-வது தெருவில் வசித்தவர் வெங்கடாச்சலம்(60). இவர் கடந்த 1983-ம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தேர்வாகி, தமிழ்நாட்டில் வனத் துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து, 2018-ம்ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அதிமுக ஆட்சி யில் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, வெங்கடாசலம், தனதுபதவியைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முக்கிய மாக, தனியார் தொழிற்சாலை களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குபுகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெங்கடாசலம் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். இதையடுத்து வெங்கடாசலத்தின் அலுவலகம், வேளச்சேரி வீடு மற்றும் அவரது தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையில், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 13.25 கிலோ சந்தன மரத்தினாலான பொருட்கள், 4 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடந்து வந்த நிலையில், வெங்கடாசலம் அதே ஆண்டு டிச.2-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மர்மம் நீடிப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்ததால், விசா ரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர்ஆய்வு செய்தனர். இதில் வருமானத்தைவிட அதிகமாக வெங்கடாசலம் பெயரிலும், அவர் குடும்பத்தினர் பெயரிலும் சுமார் 220 சதவீதம் சொத்து இருப்பது தெரியவந்தது. அந்த வகையில், வெங்கடாச்சலம் குடும்பத்தினர் களிடம் வருமானத்தை விட அதிக மாக ரூ.6 கோடியே 85 லட்சத்து 37 ஆயிரத்து 676-க்கு சொத்துகள் இருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் உறுதி செய்யப் பட்டது.

இதையடுத்து, வெங்கடாசலத்தின் மனைவி வசந்தி, மகன் விக்ரம் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x