

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து, தற்போது, பல நகரங்களில் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, குறிப்பிட்ட சில நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
அந்த வகையில், 12 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, சேலத்தில் தலா 106 டிகிரி வெப்பநிலை பதிவானது.
ஈரோட்டில் 105, வேலூரில் 104, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூரில் தலா 103, மதுரை,திருத்தணி, தருமபுரி, மதுரை விமானநிலையத்தில் தலா 102, கோயம்புத்தூர், தஞ்சாவூரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 97, நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரி வெப்பநிலை பதிவானது.