Published : 19 Apr 2023 06:06 AM
Last Updated : 19 Apr 2023 06:06 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் பணியாற்றும் 21 பேரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் தாலுகா அலுவலகம், நில எடுப்பு பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்டம், கலால், முத்திரைத்தாள் பிரிவு என பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் பலருக்கு ஓராண்டு முடிந்துவிட்டது. இதனால் தாலுகா வட்டாட்சியர்கள் பலர் விடுமுறையில் சென்றனர்.
இதையடுத்து வட்டாட்சியர்களுக்கு இடையே பணியிட மாறுதல் கலந்தாய்வு மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. இதில் 21 வட்டாட்சியர் மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியர்கள் விவரம்: மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் கிடங்கு மேலாளர் வி.சரவணன் கள்ளிக்குடி தாலுகா வட்டாட்சியராகவும், மேலூர் சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவில் பணியாற்றிய கா.அனீஷ் சத்தார் திருப்பரங்குன்றம் வட்டாட்சியராகவும், நகர் நிலவரித்திட்ட வட்டாட்சியர் அ.பழனிக்குமார், மதுரை கிழக்கு தாலுகா வட்டாட்சியராகவும், மதுரை சுற்றுச்சாலை நில எடுப்புப் பிரிவில் பணியாற்றும் சி.நாகராஜன் மதுரை மேற்கு தாலுகா வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலூர் நில எடுப்புப் பிரிவில் பணியாற்றும் கி.செந்தாமரை மேலூர் தாலுகா வட்டாட்சியராகவும், பேரையூர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாற்றும் அ.மூர்த்தி வாடிப்பட்டி தாலுகா வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர்.
மதுரை தெற்கு முத்திரைத்தாள் வட்டாட்சியர் ம.ஆனந்தி மதுரை மேற்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும், மதுரை வடக்கு முத்திரைத்தாள் பிரிவில் இருந்த ஐ.சையது முகைதீன் இப்ராகிம் மதுரை கலால் அலுவலகக் கண்காணிப்பாளராகவும், மேலூர் வட்டாட்சியர் ஞா.சரவணப் பெருமாள் வாடிப்பட்டி நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர்.
மேலூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சு.ச.சிவக்குமார் மதுரை சுற்றுச்சாலை நில எடுப்பு பிரிவுக்கும், ஆதி திராவிடர் நிலத்துறை நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியர் ஆர்.ரவி மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், மதுரை தெற்கு தாலுகா சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெ.லதா மதுரை கிழக்கு கலால் மேற்பார்வை அலுவலராகவும் மாற்றப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் வ.பார்த்திபன் திருமங்கலம் சமூக பாதுகாப்புப் திட்டத்துக்கும், விமான நிலைய விரிவாக்க நில எடுப்புப்பிரிவு வட்டாட்சியர் கோ.சிவக்குமார் திருப்பரங்குன்றம் நில வரித்திட்ட பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
மதுரை கிழக்கு கலால் மேற்பார்வை அலுவலர் பஞ்சாட்சரம் மதுரை தெற்கு தாலுகா முத்திரைத்தாள் பிரிவுக்கும், மதுரை தெற்கு கோட்ட கலால் அலுவலர் ரா.லயனல் ராஜ்குமார் மதுரை நில எடுப்புப் பிரிவுக்கும், மதுரை கிழக்கு தாலுகா வட்டாட்சியர் தி.சிவகாமிநாதன் விமான நிலைய நிலம் எடுப்புப் பிரிவுக்கும், கலால் அலுவலக கண்காணிப்பாளர் கு.சூரியகுமாரி மதுரை வடக்கு தாலுகா சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டனர்.
திருமங்கலம் தாலுகா சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆ.ஜெகஜோதி மேலூர் நில எடுப்புப் பிரிவுக்கும், கள்ளிக்குடி வட்டாட்சியர் தே.சுரேந்திரன் பேரையூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கும், வாடிப்பட்டி தாலுகா நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியர் சீ.ஹேமலதா மேலூர் தாலுகா சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் மாறுதல் செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT