

சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள 37 வகையான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, இனவரவியல் ஆய்வு ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்" என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 4 ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 37 வகையான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, இனவரவியல் ஆய்வு (Ethnography study) ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* மாணாக்கர் விடுதிகளில் புத்துணர்வு அளிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் மன்றங்கள் உருவாக்கப்படும்; வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித் திட்டம் இரண்டு திட்டக் கூறுகளாக திருத்தி அமைக்கப்படும்.