

சென்னை: சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு `சன்மார்'குழுமத் தலைவர் என்.சங்கர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ‘இந்து’ என்.ராம் கலந்துகொண்டு, பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
சன்மார் குழுமத்தின் சிஎஸ்ஆர் (பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு ணர்வுத் திட்டம்) அறக்கட்டளை, தரமான மற்றும் குறைந்த சேவைக் கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கும் மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றி வருகிறது.
அந்தவகையில், சங்கரா நேத்ராலயாகண் மருத்துவமனையில், சன்மார்குழுமத்தின் சிஎஸ்ஆர் அறக்கட்டளை மூலம் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், சன்மார் குழுமத் தலைவரான என்.சங்கரின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சங்கரா நேத்ராலயா கண்மருத்துவமனையின் 5-வது தளத்தில்அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவப் பிரிவுக்கு, சன்மார் குழுமத் தலைவர் என்.சங்கர் பெயர் சூட்டப்பட்டது.
‘இந்து’ என்.ராம் திறந்துவைத்தார்: இந்த நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.ராம்சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். இதில், சன்மார் குழுமத் துணைத் தலைவர்கள் என்.குமார், விஜய் சங்கர் மற்றும் மாதுரிகா சங்கர், சந்திரா சங்கர்,சங்கரா நேத்ராலயா மருத்துவமனை தலைவர் டி.எஸ்.சுரேந்தர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் கண் மருத்துவர் ஹென்னா கவுர் தில்லான், குழந்தைகள் கண் மருத்துவத் துறையின் சேவைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், அரங்கில் வைக்கப்பட்டிருந்த என்.சங்கரின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.