ஒசூர் தனியார் மருத்துவமனையில் ஊழியருக்கு கத்திக்குத்து: கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் இளைஞர் சிக்கினார்

ஒசூர் தனியார் மருத்துவமனையில் ஊழியருக்கு கத்திக்குத்து: கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் இளைஞர் சிக்கினார்
Updated on
1 min read

ஒசூரில் தனியார் மருத்துவமனைக் குள் புகுந்த இளைஞர், அங்கு பணியில் இருந்த ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தனியார் மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில் பாகலூரைச் சேர்ந்த பிரகாஷ் (30), மருந்தக ஊழிய ராக பணிபுரிந்து வருகிறார். வியாழக்கிழமை அதிகாலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கையில் நீண்ட கத்தியுடன் மருத்துவ மனைக்குள் வந்தார். நேராக மருந்தகத்துக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை கத்தியால் சரமாரி யாக குத்திவிட்டு நிதானமாக நடந்து சென்றார். பிரகாஷின் அலறல் சப்தம் கேட்டதும், ஊழியர்கள் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். கத்தியுடன் வந்த இளைஞர், மருத்துவமனைக் குள் நுழைந்தது முதல் பிரகாஷை கத்தியால் தாக்கும் அனைத்து காட்சிகளும் அங்கு பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

விசாரணையில், அந்த இளைஞர் தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த சசி (எ) பானிபூர் சசி என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

சசி தனது உறவினரை சிகிச்சை காக இங்கு ஏற்கெனவே சேர்த்திருந் தார். மேலும் அவருக்கு தெரிந்த மற்றொரு பெண்ணும் அந்த மருத்துவமனையில் பணி யாற்றி வந்ததால், அவர் மருத்துவ மனைக்குள் நுழைந்தபோது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சசி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in