தமிழகத்தில் புதிதாக 521 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.17) ஒரே நாளில் 521 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமையன்று ஒருநாள் கரோனா பாதிப்பு 521 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 514 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 521ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,330 வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை 386 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக 140 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், கன்னியாகுமரியில் 44 பேருக்கும், திருச்சியில் 31 பேருக்கும், திருவள்ளூர் மற்றும் திருப்பூரில் தலா 25 பேருக்கும் இன்று புதிதகா கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in