போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் ஏப்.19-ல் கோட்டையை நோக்கி பேரணி

போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் ஏப்.19-ல் கோட்டையை நோக்கி பேரணி
Updated on
1 min read

சென்னை: அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஏப்.19-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சுமார் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர்.

84 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணவே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து எங்கள் தரப்புக்குசாதகமான தீர்ப்பும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால்அரசோ மேல்முறையீடு செய்து, தீர்ப்புக்கு தடைபெற்றுள்ளது.

இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஏப்.19-ம் தேதிசென்னை, பல்லவன் சாலையில் இருந்து கோட்டையைநோக்கி பேரணி நடத்த உள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in