

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் இன்று (ஏப்.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.