Published : 01 Jul 2014 12:11 PM
Last Updated : 01 Jul 2014 12:11 PM

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது: சூதாட்ட பழக்கத்தால் விபரீதம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி ஜானி ஜான்கான் சாலை தேவராஜ் தெருவில் வசிப்பவர் அலி முகமது உசேன்(60). ஜாம்பஜாரில் பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். இவரது மனைவி மெஹருன் நிஷா(57). இவர் ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களின் மகன் சுனித் அலி(30). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் துபாயில் வசிக்கிறார். வீட்டில் தனியாக இருந்த மெஹருன் நிஷா கடந்த 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். அதோடு வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் 61 சவரன் நகைகள் கொள் ளையடிக்கப்பட்டன. கொள் ளைக்காரர்கள் வந்து செல்லும் காட்சிகள் அவர்கள் வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

கொள்ளையர்கள் வந்த ஸ்கூட்டர் எண்ணும் அதில் பதிவாகியிருந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நிருபர் களிடம் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட மெஹருன் நிஷாவின் உறவினர் மகன் ஷபி முகமது(29). இவர் சூதாட்டப் பழக்கம் உடை யவர். இதில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் மெஹருன் நிஷாவிடம் ரூ.3 லட்சம் பணம் கடன் கேட்டி ருக்கிறார். முதலில் தருவதாக ஒப்புக்கொண்ட அவர் பிறகு திடீரென மறுத்து விட்டார். மெஹருன் நிஷாவிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்டு ஷபிமுகமதுவும், அவரது நண்பர் அப்துல்ஹமீதும் சேர்ந்து 24-ம் தேதி மெஹருன் நிஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரை கொலை செய்து பணத்தை யும் நகையையும் கொள்ளை யடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பதுங்கியிருந்த இரண்டு பேரும் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து பணம், நகைகளும் மீட்கப்பட்டன. ஷபிமுகமது ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் பர்தா அணிந்து வந்து கொலை, கொள்ளையை நடத்தியிருக்கிறார்.

எழும்பூர் பெண் டாக்டர் எம்மா கொலை வழக்கிலும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரின் சொத்துக்காக கொலை நடந் திருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்.

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக் கிலும் பல ஆதாரங்கள் கிடைத் துள்ளன. குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மவுலிவாக்கத்தில் 11 மாடி இடிந்த விபத்தில் மண் பரி சோதனை செய்யாமலும், தரமான கட்டுமான பொருட்கள் பயன் படுத்தப்படாததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இணை ஆணையர் சண்முகவேல் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x