அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ஸ்கார்பியோ கார் வழங்கிய இபிஎஸ்

புதிய கார்
புதிய கார்
Updated on
1 min read

சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு "ஸ்கார்பியோ" காரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன், கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழகத்தின் சார்பில் ``TN 06 AD 5666" என்ற பதிவு எண் கொண்ட ``Mahindra Scorpio” புதிய வாகனத்தை வழங்கி, தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in