தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டேட் வங்கியின் 3 கிளைகள் வேறு இடத்துக்கு உடனடி மாற்றம்

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டேட் வங்கியின் 3 கிளைகள் வேறு இடத்துக்கு உடனடி மாற்றம்
Updated on
2 min read

பாரிமுனையில் தீ விபத்து நடந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஸ்டேட் வங்கியின் 3 கிளைகள், இரவோடு இரவாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள கிளை களில் பாதுகாப்பை பலப்படுத்த வல்லுநர்கள் குழு அமைக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் இருந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை, சிறுதொழில் கடன் வழங்கும் கிளை மற்றும் ராஜாஜி சாலை கிளைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சனிக்கிழமை இந்தக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. இந்நிலையில், சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்த கிளை அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஞாயிற் றுக்கிழமை காலை 11 மணி முதல் ஆவணங்கள், பொருட்களை வேறு இடங்களுக்கு மாற்றும் பணி தொடங்கியது. திங்கள்கிழமை விடிய விடிய இந்தப் பணி நடந் தது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பி.எஸ்.பிரகாஷ் ராவ், நிருபர்களிடம் கூறியதாவது:

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வரு கிறது. வங்கியில் இருந்த வாடிக் கையாளர்களின் பணம், நகை களுக்கு எந்த சேதமும் ஏற்பட வில்லை. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இயங்கிய 3 கிளை கள் வேறு கிளைகளுக்கு மாற்றப் பட்டுள்ளன. பிரதான கிளை, பிரகாசம் சாலையில் உள்ள பிராட்வே கிளைக்கு மாற்றப்பட்டது. ராஜாஜி சாலை கிளை, எழும்பூர் கிளைக்கும் சிறுதொழில் கடன் வழங்கும் கிளை (எஸ்.எம்.ஏ.), தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை கிளைக்கும் மாற்றப்பட்டுள்ளன. இந்தக் கிளைகளில் வாடிக்கை யாளர்கள் தொடர்ந்து தங்கள் வங்கிச் சேவையை பெறலாம். மாற்றப்பட்ட கிளைகள், திங்கள் கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மாற்றப்பட்டுள்ள கிளைகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த பாரம்பரிய கட்டிடத்தை சீரமைத்து, அங்கு மீண்டும் வங்கிப் பணி தொடங்க முடியுமா என்பது குறித்து தொல்லியல் துறை நிபுணர்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் இறுதி முடிவு செய்யப்படும்.

சென்னையில் 4 வங்கிகள் பாரம் பரிய கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் ஸ்டேட் வங்கி கிளைகளில் முழுமை யாக ஆய்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 965 கிளை களிலும் தீ தடுப்பு மற்றும் பாது காப்பு அம்சங்களை மேம்படுத்த தீயணைப்பு அதிகாரிகள், வல்லுநர் கள் கொண்ட குழு அமைக்கப்படும்.

புதிய கிளைகள் பற்றி தகவல் அறிய 94458 61231 (பிரதான கிளை), 94458 60962 (ராஜாஜி சாலை கிளை), 94458 66364 (எஸ்.எம்.சி. கிளை) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பிரகாஷ் ராவ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in