அண்ணாமலைக்கு எதிராக திமுக சட்ட நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப்படம்.
அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப்படம்.
Updated on
1 min read

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, ''திமுகவினருக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதெல்லாம் ஒன்றுமில்லை. வருமான வரித்துறை மத்திய அரசிடம் உள்ளது. சொத்து எப்படி வந்தது என அதன்மூலம் கணக்கு பார்த்துக் கொள்ளலாம். ஊழல் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பது பற்றி எங்களது கட்சி சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். வாய் வார்த்தையாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர். 15 நாளுக்குள் பதில் வரவில்லை என்றால் பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர்; அது நடக்கும். அண்ணாமலை கூறியது எதுவும் நம்ப முடியவில்லை

திருமங்கலம் அருகே பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு உதவி செய்வது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்து, என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வோம்'' என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in