பிரதமரின் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
Updated on
1 min read

சென்னை: பிரதமரின் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், "தம்பி நீ இங்கு வர வேண்டாம்; உனக்கு அளிக்கப்பட்டு இருக்கக் கூடிய பணி கர்நாடக பணி; நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து அளிக்க வேண்டிய பணி உன்னுடைய பணி; எனவே நீ இங்கு வர வேண்டாம் என்று பிரதமரே என்னிடம் தொலைபேசியில் கூறினார். உடனே இங்கு சிலர் அண்ணாமலை மீது மோடிக்கு கோபம் என்றெல்லாம் கூறுகிறார்கள். மோடியை பார்க்க தமிழகத்திற்கு வந்து வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதை அவரும் விரும்ப மாட்டார்" என்று தெரிவித்தார்.

அண்ணாமலையின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளை வாசிக்க :

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in