அமித் ஷா குறித்து பேசியதை நீக்காததால் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

அமித் ஷா குறித்து பேசியதை நீக்காததால் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் நேற்று நடைபெற்ற விவாதம்:

நயினார் நாகேந்திரன் (பாஜக): நேற்று முன்தினம் விளையாட்டுத் துறை அமைச்சர் பேசும்போது, மத்திய உள்துறை அமைச்சர் பெயரை குறிப்பிட்டு ஐபிஎல் டிக்கெட் அவரும் அவர் மகனும் வைத்திருப்பதாகத் தெரிவித்தார். ‘திரு’ என்று குறிப்பிடாமல் ‘அமித் ஷா மகன்’ என்று இருக்கிறது அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

பேரவைத்தலைவர் அப்பாவு: அதில் ‘திரு’ என்றுதான் உள்ளது.

நயினார் நாகேந்திரன்: அதை நான் தவறாக தெரிவிக்கவில்லை. அது அவைக்குறிப்பில் இருக்க வேண்டாம் என்று கருதுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: அதில் என்ன தவறு இருக்கிறது. ‘திரு’என்று குறிப்பிட்டுதான் பேசியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்: தவறாகவோ, குறையாகவோ சொல்லவில்லை. அது இடம்பெற வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

முதல்வர்: அது என்ன தகாத வார்த்தையா? தகாத வார்த்தையாக இருந்தால்தான் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

(அந்த வாசகத்தை நீக்க வலியுறுத்தி நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேச வாய்ப்பு கேட்டார்.)

பேரவைத்தலைவர்: உள்துறை அமைச்சரை குறிப்பிட்டுதானே பேசினார். அதில் ஒன்றும் தவறில்லை. அமருங்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in