

இன்றைய தலைமுறையினர் முதல் குழந்தையை கொஞ்சம் தாமதமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் திங்கள்கிழமை சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். தி.நகர் நடேசன் பூங்கா வில் தொடங்கி கோபதி நாராயணா சாலையில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் பேரணி முடிந்தது. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப் புணர்வு வாசகங்கள் கொண்ட அட்டைகளை கைகளில் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் தொகை கட்டுப் பாடு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் சைதை துரைசாமி பரிசு களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் மக்கள் தொகை 123 கோடியை தாண்டிவிட்டது. நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ள தற்கு மக்கள் தொகை வளர்ச்சி தான் காரணம். திருமணம் ஆன 6 மாதத்தில் புதுமணத் தம்பதியைப் பார்த்து ‘வீட்டில் விஷேசம் ஏதுமில்லையா’ என்று அக்கம்பக்கத்தினர் கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். இந்த தவறான போக்கை தடுக்க வேண் டும். திருமணம் ஆனதும் கொஞ் சம் இடைவெளிவிட்டு தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதுதான் நல்லது. இதை மருத்துவர்களும் அறிவுறுத்த வேண்டும். இந்தக் காலத்தில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தையே போதுமானது.
பெண்கள் தங்களது ஆரோக்கி யத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஒரு குழந்தை பெற்ற துமே சிலர் ஆரோக்கியம் இழந்து விடுகின்றனர். இதைத் தடுக்க உணவு முறைகளை மாற்றிய மைக்க வேண்டும். காய்கறிகள், மஞ்சள், மிளகு, சோற்றுக்கற்றாழை போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத் தாளர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ் ணன், மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், சுகாதாரத்துறை துணை கமிஷனர் ஆனந்த் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.