எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு: சட்டப்பேரவைக்கு கருப்பு முகக்கவசத்துடன் வந்த அதிமுக உறுப்பினர்கள்

கருப்பு மாஸ்க் அணிந்துள்ள அதிமுக உறுப்பினர்கள்
கருப்பு மாஸ்க் அணிந்துள்ள அதிமுக உறுப்பினர்கள்
Updated on
1 min read

சென்னை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கூறி சட்டப்பேரவை நிகழ்வுகளில் கருப்பு முகக்கவசத்துடன் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சை நேரலை செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டி அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேரமில்லா நேரத்தில் நான் கேள்வி எழுப்பியதுமே நேரலையை ரத்து செய்துவிட்டனர். அதற்கு முன்னும், பின்னும் காட்டுகிறார்கள். முதல்வரின் பதில், சிறப்புத் தீர்மானமெல்லாம் ஒளிபரப்புகிறார்கள். எனது பேச்சை மட்டும் காட்டவில்லை. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். சட்டப்பேரவையில் நேரலை என வாக்குறுதி கொடுத்தனர். அதை நிறைவேற்றினர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியினர் பேசுவதைக் காட்டவில்லை. இதனால் சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை. சபை நடுநிலையாகச் செயல்படவில்லை ”என்றார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை நிகழ்வுகளில் கருப்பு முகக்கவசத்துடன் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கரோனா தொற்றை தடுப்பதில் அரசு அலட்சியமாக உள்ளதாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் கூறி இவற்றை கண்டித்து கருப்பு முகக்கவசம் அணிந்து வந்துள்ளதாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in