

சென்னை: கடலூர், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சில மணித்துளிகலிலேயே பக்கிரிசாமி கைது செய்யப்பட்டார்.