Published : 12 Sep 2017 10:04 AM
Last Updated : 12 Sep 2017 10:04 AM

இமானுவேல் சேகரன் 60-வது நினைவு தினம்: பரமக்குடியில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 60-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காலையில் இமானு வேல் சேகரனின் சொந்த கிராமமான செல்லூர் கிராம மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அதிமுக அம்மா அணி சார்பில் துணை பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மணிகண்டன், சரோஜா, ராஜலெட்சுமி, அன்வர்ராஜா எம்பி உட்பட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், வி.சத்தியமூர்த்தி, தமிழரசி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் திசைவீரன், முருகவேல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தமாகாவைச் சேர்ந்த ரவிச்சந்திர ராமவன்னி, சோ.பா. ரெங்க நாதன், ராம்பிரபு உள்ளிட்டோரும், மதிமுகவைச் சேர்ந்தடாக்டர் சதன் திருமலைக்குமார், கே.ஏ.எம்.குணா மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், சுப.நாகராஜன், குப்புராமு, சீனிவாசன், பொன்.பாலகணபதி, முரளிதரன் உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்

காங்கிரஸ் சார்பில் சரவண காந்தி, செல்வப்பெருந்தகை, மலேசியா பாண்டியன், முன்னாள் எம்பி விஸ்வநாதன், ஜான்சிராணி, தேவேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சிவா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் அந்த அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி பரமக்குடியில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்ட பின்னரே அங்கு அனுமதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x