ஆரணியில் கருணாநிதி பெயரில் கைத்தறி பட்டுப் பூங்கா: பேரவையில் அமைச்சர் காந்தி அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவையில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கைத்தறி ரகங்களின் மதிப்பை உயர்த்தவும், உள்நாட்டு மற்றும்சர்வதேச சந்தைகளில் பிரபலப்படுத்தி அதன்மூலம் கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழ்நாட்டின் கைத்தறி ரகங்களுக்கு பொது வணிகச் சின்னம் மற்றும் தொகுப்பாக்கல் அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து ரூ.35 லட்சத்து 40 ஆயிரத்தில் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் பட்டு ரகங்களில் ஆரணி பட்டுக்கென பிரத்யேக சிறப்பியல்புகள் உள்ளன. ஆரணி, ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆரணிப் பட்டுநெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
இருப்பினும், நகரமயமாக் கல் மற்றும் மாசடைவதால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக இப்பகுதியில் நெசவுக்கு முந்தையமற்றும் பிந்தைய பணிகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
எனவே, நெசவுக்கு முந்தைய,பிந்தைய பணிகளை மேற்கொள்ள வும் கண்கவர் வடிவமைப்புகளில் கைத்தறி ரகங்களைஉற்பத்தி செய்யவும் ஆரணிக்கு அருகில் உள்ளபெரியண்ணநல்லூரில் ‘டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா’ அமைக்கப்படும்.
இப்பூங்காவில் நெசவுக்கூடம், சாயச்சாலை, பூஜ்ஜிய நிலை கழிவுநீர் வெளியேற்றம் வசதியுடன்கூடிய பொது சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வடிவமைப்பு மையம், நெசவுப் பயிற்சி, விற்பனையகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம்சுமார் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பதனீட்டாளர்கள் பயன்பெறுவர்.
இளைஞர்களுக்கான நெசவுப்பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டம் ரூ.1.40 கோடியில் செயல்படுத்தப்படும். கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை கூலியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கான ஈமச்சடங்கு உதவித் தொகைரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘கைத்தறி ரகங்கள் பிரபலப்படுத்தும் திட்டம்’செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில், தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் தொடங்கப்படும்.
கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் வசதியாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகியமெட்ரோ நகரங்களில் ‘வாங்குவோர் விற்போர் சந்திப்பு’ நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் காந்தி அறிவித்தார்.
