ஆளுநரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு

ஆளுநரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநரை கண்டித்து சென்னையில் நாளை கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநருக்கு எதிராக தமிழக முதல்வர் கொண்டு வந்த, தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆன்லைன் மீதான தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

ஆனாலும், தமிழக ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுகள் குறித்தும் எந்தவித வருத்தமும், விளக்கமும் அளிக்காத காரணத்தினாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஏப்.12-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், அதே நாளில் ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக, சைதாப்பேட்டை தேரடித் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in