

சென்னை: அமமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து 3-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம், வரும் 20-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அன்றைக்கு ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதில் பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். அனைத்து நிலை நிர்வாகிகளும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.