

புதுக்கோட்டை: நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரதமர் மோடி அவமதிக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் திமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி பேசியது: நாடாளுமன்றத்தில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் உண்மையை பேச மறுக்கின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரதமர் மோடி அவமதிக்கிறார்.
அதானி விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-க்குப் பயந்து நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சியினர் வாய் திறக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் வாய் திறந்து கேள்வி எழுப்பிய கட்சி திமுக தான் என்றார்.