போக்சோ வழக்குகளை விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு ஒப்புதல்

புதிய நீதிமன்றம் | கோப்புப் படம்
புதிய நீதிமன்றம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்போது 16 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி போக்சோ வழக்குகளை விரைவாக நடத்த திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசின் நீதித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in