

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும் நிலுவையில் வைத்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஓரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ‘‘ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்’’ என்று பேசினார். இந்நிலையில், பேரவையில் இன்று ஆளுநர் ரவிக்கு எதிராக அரசு சார்பில் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.