சென்னை | சிறப்பு முகாம்களில் ரூ.18 கோடி அளவில் சொத்து வரி வசூல்

சென்னை | சிறப்பு முகாம்களில் ரூ.18 கோடி அளவில் சொத்து வரி வசூல்

Published on

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 170 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் ரூ.18 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டிலும், முதல் 15 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

அதை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் சொத்துவரி வசூல் சிறப்பு முகாம் சனி,ஞாயிற்றுக்கிழமையில் 170 இடங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.18 கோடியே, 17 லட்சம் சொத்து வரி வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in