5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்கள் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை நியமித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட பார்வையாளராக கே.முரளீதரன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பார்வையாளராக எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பார்வையாளராக கே.வெங்கடேசன், சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளராக ஆர்.ஏ.வரதராஜன் மற்றும் தருமபுரி மாவட்ட பார்வையாளராக கே.முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்த நிலையில், பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. இதற்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால், அங்கு அந்த பணிகளில் அவர் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் கூறப்பட்டது. சென்னையில் நடந்த பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை கலந்துகொள்ளாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், புதிய மாவட்ட பார்வையாளர்களை நியமித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in