மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணமில்லா நீட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணமில்லா நீட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி, திசை தொண்டு அறக்கட்டளையுடன் இணைந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு கட்டணமில்லா நீட் பயிற்சியை வழங்கவுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக ஒவ்வொரு உதவிக் கல்வி அலுவலர்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6 மாணவர்கள் வீதம் 60பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து 30 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கட்டணமில்லாமல் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க மற்றும் வழிகாட்டுதல் நிகழ்வை மாநகராட்சி மேயர் பிரியாநேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது இப்பயிற்சிக்குரிய ஆசிரியர்களான, பல்வேறு மருத்துவ மாணவர்கள், மாணவியர்களுக்கு காணொலி வாயிலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துணை மேயர்மகேஷ்குமார், கல்வி நிலைக்குழுத்தலைவர் த.விசுவநாதன், கல்வி துணை ஆணையர் ஷரண்யா அறி, திசை தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ச.பரத், துணை நிர்வாக அறங்காவலர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in