திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க், காரைக்குடி & ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா: தொழில் துறையின் புதிய அறிவிப்புகள்

திருச்சி நகரம்
திருச்சி நகரம்
Updated on
1 min read

சென்னை: திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.6) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  • சிப்காட் பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் பயன்பாட்டிற்கு 600 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் ரூ.30 கோடியில் அமைக்கப்படும்.
  • இருங்காட்டுக்கோட்டை மற்றும் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.20 கோடியில் 2 தங்குமிடம் அமைக்கப்படும்.
  • நீர் பயன்பாட்டை கண்காணிக்கவும், நீர் விரயத்தை கட்டுப்படுத்தவும் ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள் சிப்காட்டில் உருவாக்கப்படும்.
  • மணப்பாறை, தேனி, திண்டிவனம், சூளகிரி ஆகிய சிப்காட்டுகளில் ரூ.20 கோடியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
  • விருதுநகர், தேனி,சூளகிரி சிப்காட்டுகளில் நிர்வாக அலுவலகம் கட்டப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 3000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.100 கோடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
  • ரூ.600 கோடியில் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
  • ரூ.70 கோடியில் காரைக்குடி மற்றும் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.

இதனிடையே, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்: கிண்டியில் ரூ.175 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம், துபாயில் புத்தொழில் மையம்: அரசின் புதிய அறிவிப்புகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in