ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை அறிக்கை

ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (74). இவருக்கு கடந்த 15-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், இருமல் ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, லேசான கரோனா பாதிப்பும் இருப்பது தெரிந்தது. பின்னர், சில நாட்களில் கரோனா பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், `விரைவில் வீடு திரும்புவேன்' என ஈவிகேஎஸ் இளங்கோவனும் வீடியோ வெளியிட்டார். ஆனாலும், இதய பாதிப்பு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in