Published : 06 Apr 2023 06:00 AM
Last Updated : 06 Apr 2023 06:00 AM
திருப்பத்தூர்: காய்ச்சல் என வந்த சிறுமிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி யிருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சக்திவேல் (35). இவரது மகள் மோனிகா (7). இந்நிலையில், சிறுமி மோனிகாவுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுமியை அழைத்து வந்து மருத்துவரிடம் காட்டினர்.
சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்த மருத் துவர், காய்ச்சல் குறைய மருந்து, மாத்திரைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார். அதை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தக பிரிவில் கொடுத்து சிறுமியின் பெற்றோர் மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.
வீட்டுக்கு சென்றதும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுமி மோனிகாவுக்கு வழங் கப்பட்ட ஒரு மாத்திரை பாதியாக உடைத்து சிறுமிக்கு வழங்க முயன்றபோது அந்த மாத்திரையில் சிறிய அளவிலான இரும்பு கம்பி ஒன்று இருந்தது. இதைக் கண்டதும், பெற்றோர் அதிர்ச்சி யடைந்தனர்.
உடனே, இரும்பு கம்பியுடன் இருந்த மாத்திரையை எடுத்துக் கொண்டு மோனிகா வின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெலக் கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இது போன்ற நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. காலாவதி யான மருந்து, மாத்திரைகள் கூட நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இன்று (நேற்று) காய்ச்சல் என வந்த சிறுமிக்கு இரும்பு கம்பியுள்ள மாத்திரையை இங்குள்ள மருந்தக பணியாளர்கள் வழங்கியுள்ளனர்.
நல்ல வேளை மாத்திரையை உடைத்து கொடுக்கும்போது இரும்பு கம்பி இருப்பது தெரியவந்தது. அப்படியே சிறுமிக்கு கொடுத்திருந்தால் இரும்பு கம்பி வயிற்றுக்குள் சென்றிருக்கும். இது போன்ற அஜாக்கிரதையான பணிகளில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பிறகு, வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து மருந்து, மாத்திரைகளையும் மாற்றி தரப்படும் எனக்கூறிய அவர் அங்குள்ள மாத்திரைகளை திருப்பி அனுப்பி வைக்க ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனுவுக்கு உத்தர விட்டார்.
அதன்படி, வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு மாத் திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT