சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் சோகம்: நீரில் மூழ்கி 5 பேர் பலி
சென்னை: சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மடிப்பாக்கம் அருகில் உள்ள மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி உள்ளனர். சுவாமியை நீராட்டும் நிகழ்விற்காக இவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் முழ்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் தற்போது வரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்களில் ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
