Published : 05 Apr 2023 06:09 AM
Last Updated : 05 Apr 2023 06:09 AM
சென்னை: சென்னை சென்ட்ரல்-பேசின்பாலம் இடையே நடைபெறும் பாலப்பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
மைசூரில் இருந்து ஏப்.19-ம்தேதி புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய விரைவு ரயில்(22681), சென்னை கடற்கரை நிலையத்துக்கு திருப்பிவிடப்படும். இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
யஸ்வந்த்பூரில் இருந்து ஏப்.14, 21 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய விரைவு ரயில் (12291), சென்னை கடற்கரை நிலையத்துக்கு திருப்பிவிடப்படும். சென்னை கடற்கரை நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏப்.15, 22 ஆகியதேதிகளில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய விரைவு ரயில் (12692) கடற்கரைநிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து யஸ்வந்த்பூருக்கு ஏப்.15, 22 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12292), சென்ட்ரலுக்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
சென்னை சென்ட்ரல்-மைசூருக்கு ஏப்.13, 20 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய ரயில் (22682), சென்னை சென்ட்ரல்-சாய் நிலையத்துக்கு ஏப்.14,21 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய ரயில்(12691) ஆகிய 2 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளன, இந்த ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக, சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வேசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT