

மதுரை: தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில், வரும் 11-ம் தேதி சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு கூட்டம், மாநில அமைப்பாளர் மு.அன்பரசு தலைமையில், அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றக் கோரி, ஏப்.11-ல் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதில், தமிழகம் முழுவது மிருந்தும் அரசு ஊழியர்களை பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.