

மதுரை: மதுரை மத்திய சிறையில் கரோனா பரவல் என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என சிறைத்துறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை, விசாரணை கைதிகள் என தனித்தனிப் பிரிவுகளில் உள்ளனர்.
இவர்களுக்கு ஏற் கெனவே கரோனா தடுப்பு நட வடிக்கை குறித்து சிறை நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, சிறைக்குள் தொற்று பரவல் அதிகரிப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது.
இது குறித்து சிறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: தற்போது, சிறையில் இருக்கும் கைதிகளில் யாருக்குமே கரோனா பாதிப்பில்லை.
பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறைக்குள் வரும் கைதிகளுக்கு அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் மூலம் முறையாகப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக் கிறோம். சோதனை முடிவு தெரியும் வரை சிறையில் தனிமைப்படுத்தி முடிவு வந்தபின் சிறைக் குள் மாற்றுகிறோம்.
மதுரை மத்திய சிறை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. மார்ச் 28-ல் விசாரணை கைதியாக வந்த ஒருவருக்குப் பரிசோதனையில் தொற்று இருப்பது தெரிந்தது. அவரை வெளியில் அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம். கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கரோனா வதந்தியை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.